Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடப்பு ஆண்டின் சாதனை தோல்வி: இலங்கை அணியின் மறுபக்கம் இது!

In கிாிக்கட்
Published: 04:08 GMT, Oct 19, 2017 |
0 Comments
2059
icon_com
This post was written by : Anojkiyan
Australia v India: Semi Final - 2015 ICC Cricket World Cup

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் படுதோல்வியடைந்துள்ளது.

இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணி, ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானிடம் பறிகொடுத்துள்ளது.

அத்தோடு நடப்பு ஆண்டில் தொடர்ந்து தோல்வியடைந்த 10வது போட்டியாக இந்த தோல்வி பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நேற்று (புதன்கிழமை) அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய இலங்கை அணி, பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 208 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக உபுல்தரங்க 61 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் ரம்மான் ரையீஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து 209 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 42.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதோடு ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.

பாகிஸ்தான் அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 100 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட இமாம் உல் ஹக் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg