Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். இணைந்தும் தனியாகவே உள்ளனர்: முத்தரசன் கண்டனம்

In இந்தியா
Published: 04:18 GMT, Oct 19, 2017 |
0 Comments
1339
icon_com
This post was written by : Kemasiya

ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ் இணைந்த பின்னரும், தனித்தனியாகவே செயற்பட்டு வருவதாகவும், தற்போதைய தமிழக அரசின் அசமந்த போக்கினால், தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு அவர் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டிருந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தினகரன் அணியினர் மூன்றாவது அணியாக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர். தங்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாத நிலையில், ஆளும் கட்சியுள்ளது. மக்களுடைய பிரச்சினைகள் எதுவும் இதுவரை தீர்வு காணப்படாமல், பின்தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாத செயற்பாடற்ற அரசாக, தற்போதைய தமிழக அரசு திகழ்கின்றது. இத்தகைய அரசின் அலற்சிய போக்கான, பொறுப்பற்ற போக்குகளை வன்மையாக கண்டிப்பதுடன், தங்களது பஞ்சாயத்துக்களை ஒதுக்கி வைத்து, மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg