Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சொந்த மண்ணில் நாங்களும் ராஜா தான்: இது தென்னாபிரிக்காவின் ஸ்டைல்

In கிாிக்கட்
Updated: 04:43 GMT, Oct 19, 2017 | Published: 04:42 GMT, Oct 19, 2017 |
0 Comments
1417
icon_com
This post was written by : Anojkiyan
qck_0d7ad_1508342254

பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்க அணி 104 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் தென்னாபிரிக்க அணி, மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்த பங்களாதேஷ் அணியை, தென்னாபிரிக்கா தனது சொந்த மண்ணில் துவம்சம் செய்து, எங்களின் சொந்த மண்ணில் நாங்களும் ராஜா தான் என பங்களாதேஷிற்கு உணர்த்தியுள்ளது.

நேற்று (புதன்கிழமை) பார்லலில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, டி வில்லியர்ஸின் அதிரடியின் மூலம் 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 353 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் ஆக்ரோஷத்துடனும் விவேகத்துடனும் துடுப்பெடுத்தாடிய டி வில்லியர்ஸ் 176 ஓட்டங்களையும், அஷிம் அம்லா 85 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் ரூபல் ஹொசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து 356 என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 47.5 ஓவர்கள் நிறைவில் 249 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக இம்ரூல் கைஸ் 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் ஆண்டில் பெஹல்குவே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய டி வில்லியர்ஸ் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg