Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாணிற்குள் துருப்பிடித்த ஆணி: வவுனியாவில் சம்பவம்!

In இலங்கை
Published: 04:18 GMT, Oct 19, 2017 |
0 Comments
1681
icon_com
This post was written by : Ravivarman
22551721_285503448609729_708157871_n

வவுனியா, சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் விற்பனை செய்த பாணிற்குள் துருப்பிடித்த ஆணி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வியாபார நிலையத்தில் இன்றைய தினம் (வியாழக்கிழமை) பாணினை வாங்கி வீட்டில் சென்று அதனை வெட்டிய போதே துருப்பிடித்த நிலையில் ஆணி ஒன்று இருந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த பாணை வாங்கிய நபர் வியாபார நிலையத்தில் அது தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தார். அப்பாண் வவுனியா, சூசைப்பிள்ளையார்குளம் பகுதியில் உள்ள பேக்கரியில் பெறப்பட்டதாக வியாபார நிலைய உரிமையாளரால் தெரியப்படுத்திய நிலையில், குறித்த பேக்கரி உரிமையாளருக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர்கள் அது தொடர்பில் பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் குறித்த வியாபார நிலையத்தில் பெறப்பட்ட பாண் ஒன்றில் இருந்து நீளமான பச்சை நூல் கண்டு பிடிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

22635009_285503485276392_907142221_n (1)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg