Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரோஹிங்கியா வன்முறைகள் இனப்படுகொலை என்ற நிலைப்பாட்டில் ஐ.நா இல்லை!

In உலகம்
Published: 04:55 GMT, Oct 19, 2017 |
0 Comments
1231
icon_com
This post was written by : Elakkiya

மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இனப்படுகொலை என்று ஐக்கிய நாடுகள் சபை இன்னமும் நிர்ணயிக்கவில்லை என மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆசிய பசுபிக் தலைவரான ஜோதி சங்ஹெரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ரோஹிங்கியா முஸ்லிம்கள் விவகாரத்தில் நாம் இன்னும் சட்ட எல்லைகளை நோக்குகின்றோம். எனவே தற்போதக்கு இன சுத்திகரிப்புக்கான ஒரு உதாரணமாகவே ரோஹிங்கியா முஸ்லிம்கள் விவகாரம் நோக்கப்பகின்றது. இதனை ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் செயிட் அல் ஹூசைன் தெரிவித்திருக்கின்றார். இனப்படுகொலை என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை”  என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் ரோஹிங்கியா அகதிகளிடமிருந்து பெறப்பட்ட சாட்சியங்களை ஐ.நா. குழு வெளியிட்டது. அதேவேளை கடந்த இரண்டு மாதங்களில் பங்களாதேஷிற்கு தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளின் ஆதாரங்கள் மற்றுமொரு மனிதஉரிமை குழுவால் சேகரிக்கப்படுகின்றது.

ரோஹிங்கியா அகதிகளின் சாட்சியங்களின் பிரகாரம், பாலியல் துஷ்பிரயோகங்கள், ரோஹிங்கியா கிராமங்களை அழித்தல், கலாசார மற்றும் மதத் தலைவர்களை இலக்கு வைத்து தாக்குதல் போன்ற செயற்பாடுகள் மியன்மார் பாதுகாப்பு படையினரால் திட்டமிட்டு நடத்தப்படுவதாக கூறப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg