Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கலைகளை வளர்க்க ஒன்றிணைய வேண்டும்: தங்கத்துரை

In இலங்கை
Published: 04:34 GMT, Oct 19, 2017 |
0 Comments
1131
icon_com
This post was written by : Ravivarman
V.Thangaththurai

மனிதனின் வாழ்க்கையை நல்வழிப்படுத்தும் பாரம்பரிய கலைகளை வளர்க்க ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவையாகும் என ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் வீ. தங்கத்துரை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மண்முனை மேற்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவையும் இணைந்து நடத்திய ‘கிராமிய கலைகளின் ஆற்றுகை” நிகழ்வு வவுணதீவு பிரதேசத்தின் நாவற்காடு சித்திவிநாயகர் ஆலய முன்றலில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ”கலை கலாசார நிகழ்வுகள் எமது பாரம்பரிய பண்பாடுகளையும் கலைகளையும் அழிந்துவிடாமல் எதிர்கால சந்ததிக்கும் கொண்டு செல்ல வழிவகுக்கும் எளிமையான ஒரு ஊடகமாகும்.

ஆகவே எமது கலைஞர்கள் பாரம்பரிய தமிழ் கலைகளை வளர்க்க தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது காலத்தின் தேவையாகும்.

இளம் சமுதாயத்தினர் மிகவும் திறமைவாய்ந்தவர்கள் அவர்கள் கல்வி, விளையாட்டு போன்ற துறைகளுடன் மட்டும் நின்றுவிடாது தமக்குச் சொந்தமான பாரம்பரிய கலைகளையும் தாம் போகுமிடமெல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும்.

இந்தக் கலைகளை வளர்ப்பதற்காக அரசும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களும் கலைஞர்களின் வளர்ச்சிக்காக போதிய உதவிகளை தொடர்ந்தும் வழங்க வேண்டும்” என வீ. தங்கத்துரை மேலும் தெரிவித்தார்.

Cult (8) Cult (6) Cult (1)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg