Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எனக்கு மட்டும் தனிச் சட்டமா? கொதித்கெழுந்த ஸ்ரீசாந்த்

In கிாிக்கட்
Updated: 05:00 GMT, Oct 19, 2017 | Published: 05:00 GMT, Oct 19, 2017 |
0 Comments
1220
This post was written by : Anojkiyan

இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், தன்மீதான வாழ்நாள் போட்டித் தடையை எதிர்த்து செய்த மேன்முறையீடு தோல்வியடைந்துள்ள நிலையில், அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘மிக மோசமான தீர்ப்பு… எனக்கு மட்டும் தனிச் சட்டமா? உண்மையான குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? சென்னை சுப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் மீது நடவடிக்கை இல்லையா?’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியன் ப்ரீமியர் லீக் ரி-ருவென்ரி தொடரின்போது ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அனைத்து வித சர்வதேசப் போட்டிகளிலும் விளையாட ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் சபை வாழ்நாள் தடை விதித்தது.

வாழ்நாள் போட்டித் தடையை எதிர்த்து ஸ்ரீசாந்த் மேன்முறையீடு செய்த வழக்கை விசாரித்த கேரள நீதிமன்ற நீதிபதிகள் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளனர். இந்நிலையிலேயே இத்தீர்ப்புக்கு ஸ்ரீசாந் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg