Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ்.பல்கலை. மாணவர் ஒன்றியம் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

In இலங்கை
Updated: 05:02 GMT, Oct 19, 2017 | Published: 05:02 GMT, Oct 19, 2017 |
0 Comments
1338
This post was written by : Ravivarman

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இக்கலந்துரையாடல் இன்று காலை 11 மணிக்கு ஜனாதிபதிச் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

அரசியல் கைதிகளின் கோரிக்கையை தொடர்பாக ஜனாதிபதியுடன் சந்திப்பதற்கு சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்தி தருமாறு வட.மாகாண ஆளுநரிடம் கடந்த திங்கட்கிழமை பல்கலைகழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்தே வட.மாகாண ஆளுநர் இதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

இச்சந்திப்புக் குறித்து யாழ் பல்கலைக்கழக அனைத்துபீட மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஸ்னமேனன் தெரிவிக்கையில், ”இன்றைய ஜனாதிபதியுடனான சந்திப்பில், உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது குறித்தும், வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் வலியுறுத்துவோம்.

இதற்கான பதிலினை இன்று உடனடியாகவே தரவேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம்” என அவர் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg