Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டிக்வெல்லவுக்கு இது சோதனை காலம்: 32 வருடகால சாதனையை தவறவிட்ட கதை இது

In கிாிக்கட்
Updated: 05:59 GMT, Oct 19, 2017 | Published: 05:41 GMT, Oct 19, 2017 |
0 Comments
2459
icon_com
This post was written by : Anojkiyan
Niroshan-Dickwella4

ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் குறைந்த இன்னிங்ஸில் 1000 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட இலங்கை வீரர் என்ற சாதனையை ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நிரோஷன் டிக்வெல்ல தவறவிட்டுள்ளார்.

இச்சாதனையை முறியடிப்பதற்கு பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 88 ஓட்டங்களை பெறவேண்டி கட்டாயத்தில் களமிறங்கிய டிக்வெல்ல வெறும் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததையடுத்து இச்சாதனை தவறவிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக ரோய் டயஸ், 27 இன்னிங்ஸ்களில் வேகமாக 1000 ஒருநாள் ஓட்டங்கள் பெற்றமை சாதனையாக இருந்தது. அதை 26 இன்னிங்ஸில் தகர்ப்பதற்கு டிக்வெல்லவுக்கு கிடைத்த வாய்ப்பு பறிபோயுள்ளது. அடுத்த போட்டியில் டிக்வெல்ல 69 ஓட்டங்களை பெறும் பட்சத்தில் இச்சாதனை சமப்படுத்தப்படும்.

இந்த சாதனையை நெருங்கிய மற்றொரு வீரரான குசல் மெண்டிஸ், 28 இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்கள் கடந்துள்ளார்.

நடைபெற்றுமுடிந்த இந்திய அணிக்கெதிரான தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய டிக்வெல்ல 124 ஓட்டங்களையும் தற்போது நடைபெற்றுவரும் பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் 40 ஓட்டங்களையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg