Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொதுத்துறை பணிகளில் முகத்தை மறைப்பதற்கு கியூபெக்கில் தடை

In உலகம்
Published: 05:22 GMT, Oct 19, 2017 |
0 Comments
1171
icon_com
This post was written by : Elakkiya

கியூபெக் மாநிலத்தில் மாகாண அரச சேவைகளை வழங்கும் அல்லது பெறுபவர்கள் முகத்தை மூடி மறைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கியூபெக் மாநில சட்டசபையில் நேற்று (புதன்கிழமை) மேற்படி சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க மேற்படி சட்டமானது பிரெஞ்ச் மொழி பேசும் கனேடிய மாகாணமான கியூபெக்கில் முஸ்லிம் பெண்களை புறக்கணிக்கும் வகையில் அமைந்துள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் விமர்சிக்கின்றன.

மேற்படி புதிய தடைச் சட்டம் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. எனினும் எத்தகைய முகத்திரைகள் தடை செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பில் தெளிவுபடுத்தப்படவில்லை.

இருப்பினும் முஸ்லிம் பெண்கள் அணியும் நிக்காப்பில் கவனம் செலுத்துவதாகவே சட்டம் அமைந்துள்ளது.

ஆசிரியர்கள், பொலிஸ் அதிகாரிகள், மருத்துவனை ஊழியர்கள் மற்றும் தினப்பராமரிப்பு பணியாளர்கள் போன்ற பொதுத்துறை ஊழியர்களை உள்ளடக்கியதாக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதேவேளை இந்த சட்டம் சில சூழ்நிலைகளில் விதிவிலக்கை அளிப்பதாக கூறப்படுகின்ற போதிலும் அது தொடர்பிலான விபரங்கள் வழங்கப்படவில்லை.

கடந்த 2004 ஆம் ஆண்டு பாடசாலைகளில் பிற மத அடையாளங்களை அணிவதற்கு பிரான்ஸ் தடை விதித்திருந்த நிலையில், அதிகரித்துவரும் முஸ்லிம் சனத்தொகையுடன் அதன் மதசார்பற்ற தன்மைகளை வளர்ப்பதற்கு கியூபெக்கும் போராடுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg