Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்பெய்னின் இறுதி எச்சரிக்கை சுதந்திரத்தை தூண்டிவிடும்: கதலோனிய ஜனாதிபதி

In ஐரோப்பா
Published: 10:15 GMT, Oct 19, 2017 |
0 Comments
1168
icon_com
This post was written by : Elakkiya

கதலோனியாவின் சுயநிர்ணயத்தை இடைநிறுத்த 155 ஆவது விதிமுறைகளை ஸ்பெய்ன் அரசாங்கம் நடைமுறைப்படுத்தினாலோ, சுதந்திர பிரகடனத்தை இடைநீக்கம் செய்திருந்தாலோ அது தமக்கே சாதகமாக அமையும் என கதலோனிய தலைவர் Carles Puigdemont  தெரிவித்துள்ளார்.

கதலோனிய அரசாங்கத்தால் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட அடையாள சுதந்திர பிரகடனத்தை திரும்பப் பெறுவதற்கு மட்ரிட் அரசாங்கம் கால அவகாசம் வழங்கியுள்ளது. அவ்வாறு திரும்பப் பெறாத பட்சத்தில் பிராந்தியத்தின் சுயாட்சி நிறுத்தப்படும் என்றும் மட்ரிட் எச்சரித்துள்ளது.

ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ரஜோய் நேரடி ஆட்சிக்கு அறிவிப்பு விடுக்கும் பட்சத்தில் கதலோனியாவின் பிராந்திய சுயாட்சி மூன்று அல்லது ஐந்து நாட்களின் முடக்கப்படும். இந்நிலையில் மட்ரிட்டின் நேரடிக் கட்டுப்பாடு கதலோனியாவில் உள்நாட்டு அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் பரவலாக நிலவுகின்றது.

ஸ்பெய்னின் 1978 அரசியலமைப்பு 155 ஆவது பிரிவு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சர்வாதிகாரி ஜெனரல் பிராங்கோவின் மரணத்திற்கு பின்னர் ஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்தியது. இது நெருக்கடிகள் ஏற்படும் பட்சத்தில் மட்ரிட் நேரடி ஆட்சியை சுமத்துவதற்கு அனுமதி வழங்கியது. இருப்பினும் அவ்வாறான ஒரு சூழ்நிலை இதுவரை இடம்பெறவில்லை.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg