Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கமல்ஹாசனை கைது செய்யக் கோரி மனுத் தாக்கல்

In இந்தியா
Updated: 10:32 GMT, Oct 19, 2017 | Published: 10:32 GMT, Oct 19, 2017 |
0 Comments
1301
This post was written by : Kemasiya

நடிகர் கமல்ஹாசனை கைது செய்யக் கோரி, சென்னை பொலிஸ் நிலையத்தில் தேவராஜன் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நிலவேம்பு கசாயம் கொடுக்க வேண்டாம் என, கமல் தவறான அபிப்பிராயத்தை பரப்புவதால், டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களே மேலும் பாதிக்கப்படுவதாகவும், எனவே கமலை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி, இன்று (வியாழக்கிழமை) காலை குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நிலவேம்பு கசாயம், பக்கவிளைவுகளை ஏற்படுத்தவில்லை என்பதை உறுதி செய்யும் வரை, நிலவேம்பு கசாயத்தை வழங்க வேண்டாம் என, நேற்று (புதன்கிழமை) நடிகர் கமல்ஹாசன், தனது நற்பணிமன்றத்திற்கு உத்தரவிட்டு டுவிட் செய்திருந்தார்.

இதற்கு எதிராக பல அரசியல்வாதிகளும் விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையில், குறித்த மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg