Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திரைக்கு வருகிறது மதிசுதாவின் ‘உம்மாண்டி’

In
Published: 10:33 GMT, Oct 19, 2017 |
0 Comments
1467
icon_com
This post was written by : Varothayan
Poster with theater with ilamthamizh

ஈழ சினிமாவில் தனக்கென ஒரு தனியிடத்தைத் தக்கவைத்துக் கொண்டு, வளர்ந்து வரும் இயக்குனர் மதிசுதாவின் முதலாவது முழு நீளத் திரைப்படமான ‘உம்மாண்டி’ இம்மாத இறுதியில் வாரம் திரைக்கு வருகின்றது.

இது குறித்த, அதிகாரபூர்வ அறிவிப்பை அண்மையில், யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மதிசுதா விடுத்தார்.

அதன்படி, எதிர்வரும் 28, 29ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் ராஜா-2 திரையரங்கில் 5.1 ஒலித்தரத்துடன் இப்படம் வெளியிடப்பட இருக்கின்றது.

சனிக்கிழமை (28.10.2017) பிற்பகல் 3 மணிக்கு ஒரு காட்சியும் ஞாயிற்றுக்கிழமை (29.10.2017) பிற்பகல் 2:30, 4:30, 6:30 காட்சிகளும் திரையிடப்படுகின்றது.

குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே திரையரங்கு வாடகைக்கு பெறப்பட்டதால் அந் நேரத்தை தவற விடாதீர்கள் என இயக்குனர் ஈழ சினிமா ரசிகர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பல கஷ்டங்களின் மத்தியில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலான கடின உழைப்பில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்திற்கான பேராதரவை படக்குழுவினர் வேண்டி நிற்கின்றனர்.

அவர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் ஈழ சினிமாவின் வளர்ச்சிக்கும், ஈழ சினிமாக் கலைஞர்களின் வளர்ச்சிக்கும் அவர்களின் தொடர்ச்சியான நிலைபேறுக்கும் மக்கள் ஆதரவளிக்க முடியும்.

‘உம்மாண்டி’ படம் வெற்றி பெற ஆதவன் ஊடகமும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.

Poster with theater

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg