Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்ய தேர்தலில் களமிறங்கும் தொலைக்காட்சி தொகுப்பாளினி

In ஐரோப்பா
Updated: 10:36 GMT, Oct 19, 2017 | Published: 10:35 GMT, Oct 19, 2017 |
0 Comments
1124
icon_com
This post was written by : Elakkiya
_98374775_mediaitem98374773

ரஷ்யாவில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தொலைக்காட்சி தொகுப்பாளினி க்சேனியா சோப்சாக் போட்டியிடவுள்ளார்.

சோப்சாக்கின் முடிவை வரவேற்றுள்ள கிரெம்ளின் மாளிகை அரசமைப்புக்கு ஏற்ற நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளது.

எனினும், தேர்தலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் மீண்டும் போட்டியிடுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் க்சேனியா சோப்சாக்கின் பிரவேசம் எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தும் என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இவ்வாறிருக்க அனுமதி பெறப்படாது எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்ததாக 20 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அல்க்சி நவல்னிக்கு ஆதரவாகவே க்சேனியா சோப்சாக் கருத்து வெளியிட்டுள்ளார்.

தாம் நவல்னியை ஆதரிப்பதாகவும், அவர் போட்டியிடுவதற்கான தடை நீங்கினால் தேர்தல் போட்டியிலிருந்து தான் விலகிவிடுவதாகவும் சோப்சாக் கூறியுள்ளார்.

ஆனால், சோப்சாக் ஆளும் கட்சியை சார்ந்தவர் என்றும் முறைகேடாக நடத்தப்படும்; தேர்தலுக்கு ஒரு நியாயமான தோற்றத்தை அளிப்பதற்காக அவர் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார் என்று நவல்னி விமர்சனம் செய்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg