Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்லூரில் நடைபெற்ற கேதார கௌரி விரத வழிபாடு

In ஆன்மீகம்
Updated: 12:32 GMT, Oct 19, 2017 | Published: 12:31 GMT, Oct 19, 2017 |
0 Comments
1572
This post was written by : Varshini

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் கேதார கௌரி விரத நிகழ்வுகள், இன்று (வியாழக்கிழமை) அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் கருவறையில் வீற்றிருக்கும் வீரமாகாளி அம்மன் மற்றும் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் சிவலிங்கத்திற்கு விசேட அபிஷேங்கள் மற்றும் ஆராதனைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, சுவாமி உள்வீதியூடாக வலம் வந்தனர். அதன் பின்னர், வெளிவீதி உலா வந்து இடப வாகனத்தில் வீற்றிருந்து அருள்பாலித்தனர்.

இந்நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, கௌரி விரதத்திற்கான காப்பு நூலை பெற்றுக்கொண்டனர்.

கௌரி விரத சிறப்பு பூஜை வழிபாடுகளை ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கே.கமல்ராஜ் நடத்திவைத்தார்.

kethara gowry (7) kethara gowry (1) kethara gowry (8) kethara gowry (6) kethara gowry (4) kethara gowry (5) kethara gowry (2)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg