Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெசெல்சில் திரேசாமே. பிரெக்சிற் முன்னேற்றம் குறித்து மேர்க்கல் கருத்து

In ஐரோப்பா
Published: 16:33 GMT, Oct 19, 2017 |
0 Comments
1092
icon_com
This post was written by : Sivaguru Siva
457E8AEA00000578-4996020-image-a-13_1508424207804

பிரெசெல்சில் இன்று இரவு இடம்பெறும் ஐரோப்பிய ஒன்றியத்தலைவர்களின் உச்சிமாநாட்டில் பிரித்தானிய பிரதமர் திரேசா மே உரையாற்றவுள்ளார்.

பிரெக்சிற்றுக்கு பின்னர் பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்களுக்கு முழுமையாக உத்தரவாதம் ஒன்றை வழங்கிய பின்னர் திரேசாமே தனது உரையை வழங்கவுள்ளார்.

இதற்கிடையே பிரெக்சிற் நகர்வுகளில் முன்னேற்றங்கள் தெரிவதாக குறிப்பிட்டுள்ள ஜேர்மன் சான்சலர் அங்கலா மேர்க்கல் பிரெக்சிற்குப் பின்னான வணிக உறவுகள் குறித்த பேச்சுக்களை எதிர்வரும் டிசம்பரில் ஆரம்பிக்கலாமென்ற பரிந்துரையையும் முன்வைத்துள்ளார்.

பிரதமர் திரேசாமே பிரெசெல்சில் பேச்சுக்களை நடத்தும் வேளை பிரித்தானியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பினும் பிரெசெல்சில் பேச்சுக்களை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg