Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நட்டாங்கண்டலில் வெளிநோயாளர் பிரிவு கட்டடதொகுதி திறந்துவைப்பு

In இலங்கை
Published: 04:19 GMT, Oct 20, 2017 |
0 Comments
1150
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

முல்லைத்தீவு நட்டாங்கண்டலில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவுக் கட்டட தொகுதி வைபவரீதியாக திறந்துவைக்கபட்டுள்ளது.

இந்த கட்டடம் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவால் நேற்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் வடக்கு மாகாண பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட, மிகவும் பின்தங்கிய பகுதியாக காணப்படும் நட்டாங்கண்டலில் வெளிநோயாளர் பிரிவொன்று இல்லாத காரணத்தால், அங்குள்ள மக்கள் தமது மருத்துவ தேவைகளை பெற்றுக்கொள்ள மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில், இம் மக்களின் நீண்டகால கோரிக்கையை தொடர்ந்து தற்போது இப் புதிய கட்டடம் திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg