Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட கொரியாவிடமிருந்து அவுஸ்ரேலியாவுக்கு வலியுறுத்தல்

In
Published: 04:30 GMT, Oct 20, 2017 |
0 Comments
1641
icon_com
This post was written by : Risha
north

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திலிருந்து விலகி நிற்குமாறு அவுஸ்ரேலிய அரசாங்கத்தை வலியுறுத்தி வடகொரியா அறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளது.

வடகொரியாவின் அடாவடித்தனங்கள் தொடரும் பட்சத்தில் வடகொரியா முற்றாக அழிக்கப்படும் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கையை கண்டித்து இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவானது கொடூரமான அணுசக்தி பேரழிவிற்கு பொறுப்பாளியாகக் கூடும். எனவே, அனைவரும் ட்ரம்ப் நிர்வாகத்தின் கொடூரமான மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கைகளிலிருந்து விலகி நிற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பியோங்யாங் உச்சநீதிமன்றத்தின் வெளியுறவு விவகாரக் குழுவினால் இந்தோனேஷியாவிலுள்ள வடகொரிய தூதரகத்தின் மூலம் இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதமானது, அவுஸ்ரேலியாவிற்கு மாத்திரமின்றி மேலும் பல நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கக்கூடும் என அவுஸ்ரேலிய ஜனாதிபதி மெல்கம் டர்ன்புல் தெரிவித்தார்.

மேலும், இது வடகொரியா மீதான இராஜதந்திர அழுத்தத்தின் வெற்றிகரமான பிரதிபலிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg