Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோசமான நிலையில் பங்களாதேஷிலுள்ள ரோஹிங்கியா சிறுவர்கள்: யுனிசெப்

In உலகம்
Updated: 05:40 GMT, Oct 20, 2017 | Published: 05:38 GMT, Oct 20, 2017 |
0 Comments
1152
icon_com
This post was written by : Risha
uni

பங்களாதேஷ் அகதி முகாம்களில் தங்கியுள்ள ரோஹிங்கியா சிறுவர்களுக்கு உணவு, சுத்தமான நீர் மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்கவில்லை என சிறுவர்களுக்கான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) தெரிவித்துள்ளது.

மியன்மாரில் இடம்பெறும் வன்முறையினை அடுத்து அங்கிருந்து ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் தஞ்சம் கோரி பங்களாதேஷிற்கு தப்பிச் சென்றுள்ளர்.

இந்நிலையில், அகதிகள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத காரணங்களினால் சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சிறுவர்களுக்கு போதுமான உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதில்லை என யுனிசெப் சுட்டிக்காட்டியுள்ளது. சிறுவர்களில் ஐந்தில் ஒருவர் ஐந்து வயதிற்கு உட்பட்டவர் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாரந்தம் 12 ஆயிரம் சிறுவர்கள் அகதி முகாம்களுக்கு வருகை தருவதாக யுனிசேப் குறிப்பிட்டுள்ளது.

மியன்மாரில் ஏற்பட்ட வன்முறையினை அடுத்து வடக்கு ரோஹினி மாநிலத்திலிருந்து சுமார் 6 லட்சம் மக்கள் வெளியியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg