Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன்-தீபா உறுதி

In இந்தியா
Published: 06:32 GMT, Oct 20, 2017 |
0 Comments
1128
icon_com
This post was written by : Kemasiya
dgfrdsgfv

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டுவேன் என, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

திருச்சியில் வைத்து நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு உறுதிப்பட எடுத்துரைத்துள்ளார்.

செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்த தீபா,

“தற்போதைய அரசு, மக்கள் பிரச்சினைகள் குறித்து எந்த நடவடிக்கையையும் சரிவர மேற்கொள்ளவில்லை. டெங்கு குறித்த பிரச்சினையும், உயிரிழப்புக்களும், அதிகரித்தபடி உள்ளன. ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையையும்  எடப்பாடி அரசு மேற்கொள்வதாக தெரியவில்லை.

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான, எங்களுடைய மனுவும் தேர்தல் ஆணையகத்தில் உள்ளது. தொண்டர்களின் விருப்பம் எதுவோ, அதன்படியே இரட்டை இலைச்சின்னம் கிடைக்கும்.

தினகரனுக்கு மக்களை பற்றி எந்த கவலையும் இல்லை. அவருடைய நோக்கம் முழுதும், ஆட்சியை கலைப்பது தான். எனவே இத்தகைய நிலையில், தமிழ்நாட்டு மக்களுக்கு, அவர்களின் தேவைகளை நிறைவேற்ற யாரும் இல்லை. எனவே நான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன்.” என தீபா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg