Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூஸிலாந்தின் புதிய பிரதமராகிறார் ஜசின்டா அர்டேர்ன்

In
Published: 05:45 GMT, Oct 20, 2017 |
0 Comments
1162
icon_com
This post was written by : Elakkiya

நியூஸிலாந்தின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள தொழிற்கட்சித் தலைவர் ஜசின்டா அர்டேர்ன், கூட்டணி பங்குதாரர்கள் மற்றும்  அமைச்சர் பதவிகள் தொடர்பான விடயங்கள் வார இறுதியில் சீராக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கடந்த 1856 ஆம் ஆண்டுக்கு பின்னர் பதவியேற்கும் மிகவும் இளமையான பிரதமர் என்ற பெயரைப் பெறும் ஜசின்டா அர்டேர்ன் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, அடுத்தவார ஆரம்பத்தில் கட்சிகள் தமது உடன்படிக்கைகளை வெளியிடுவதாகவும் அமைச்சரவை பதவிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமது அரசாங்கம் மிகவும் சார்புடைய அரசாங்கமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜசின்டாவின் கட்சி செப்டம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தலில் இரண்டாவது இடத்தை பெற்றிருந்தது. தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை வாக்குகளை பெறாத நிலையில் ஜசின்டாவின் தொழிற்கட்சியுடன் நியூஸிலாந்தின் சிறிய கட்சியான பெர்ஸ்ட் கட்சியும் இணைந்து புதிய கூட்டமைப்பை அமைக்க தீர்மானித்துள்ளன. இந்த கூட்டமைப்புக்கு கிறீன் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg