Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மூன்றாவது சமிக்ஞை: ஹபிஸிற்கு பந்துவீச தடை விதிக்கப்படுமா?

In கிாிக்கட்
Updated: 05:50 GMT, Oct 20, 2017 | Published: 05:50 GMT, Oct 20, 2017 |
0 Comments
1575
This post was written by : Anojkiyan

பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரரான மொஹமட் ஹபிஸ், முறையற்ற விதத்தில் பந்துவீசுவதாக சர்வதேச கிரிக்கட் சபையிடம் முறையிடப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது, அவரின் பந்து வீச்சை கண்காணித்த போட்டி நடுவர் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.

மூன்றாவது முறையாகவும் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள மொஹமட் ஹபிஸிற்கு இக்குற்றச்சாட்டு நிரூபமாகும் பட்சத்தில் பந்து வீச தடை விதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கு முன்னதாக 2014ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் அபுதாபியில் நடைப்பெற்ற நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டியிலும், 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் போதும் ஹபிஸ் முறையற்ற விதத்தில் பந்துவீசுவதாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg