Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை கிரிக்கெட் அணியில் அதிகம் சம்பளம் வாங்கும் வீரர் இவர்தான்!

In கிாிக்கட்
Updated: 07:25 GMT, Oct 20, 2017 | Published: 06:21 GMT, Oct 20, 2017 |
0 Comments
2648
This post was written by : Anojkiyan

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஏஞ்சலோ மெத்தியூஸ், ஆண்டொன்றுக்கு 32 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பளமாக பெறுவதாக தெரியவந்துள்ளது.

இலங்கை அணியில் அதிக சம்பளம் வாங்கும் வீரராக மெத்தியூஸ் கணிக்கப்பட்டுள்ளார். அத்தோடு உலக கிரிக்கெட் வீரர்களின் அடிப்படையில் அவர் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளார்.

எனினும், இதில் லீக் போட்டிகளிலிருந்து பெறப்படும் வருமானம் விளம்பரங்களிலிந்து பெறப்படும் வருமானம் போன்றவை உள்ளடக்கப்படவில்லை.

மெத்தியூஸின் சம்பளம் இலங்கை மதிப்பில், 4 கோடியே 86 இலட்சத்து 40 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக சம்பளம் வாங்கும் கிரிக்கெட் வீரர்களில் முதலிடத்தில் உள்ள அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் ஆண்டொன்றுக்கு 1.47 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூபா மதிப்பில் 22 கோடியே 32 இலட்சத்து 88 ஆயிரம்) சம்பளமாக பெறுகிறார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg