Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவின் தற்போதைய அரசியல் – முன்னாள் ஜனாதிபதிகள் விமர்சனம்

In
Updated: 06:15 GMT, Oct 20, 2017 | Published: 06:13 GMT, Oct 20, 2017 |
0 Comments
1266
icon_com
This post was written by : Elakkiya
_98393504_combo

அமெரிக்காவின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளான பராக் ஒபாமா மற்றும் ஜோர்ஜ் டபிள்யு. புஷ் ஆகியோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பராக் ஒபாமா, பிரிவினை மற்றும் பயம் என்ற அரசியலை அமெரிக்கர்கள் நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதேவேளை பொது வாழ்க்கையில் கொடுமைப்படுத்துதல் மற்றும் பாராபட்சம் ஏற்பட்டுள்ளதாக ஜோர்ஜ் டபிள்யு. புஷ் விமர்சித்துள்ளார்.

நியூஜெர்சியில் ஜனநாயக கட்சி பிரசார நிகழ்வில் உரையாற்றிய ஒபாமா, “நாம் பிரிவினை அரசியலை நிராகரிக்கின்றோம் என்றும் பயத்தின் அரசியலை நிராகரிக்கின்றோம் என்றும் அமெரிக்கர்கள் உலகிற்கு செய்தி அனுப்ப வேண்டும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக நாம் பலமுறை பார்த்திருக்கின்ற பிளவுபட்ட பழைய அரசியலை இன்னமும் கொண்டிருக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று நியூயோர்க்கில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவித்த புஷ், “இனவெறி தலைதூக்கியுள்ளது. சதித்திட்டங்களால் எங்களுடைய அரசியல் பாதிக்கப்படுகின்றது. ஜனநாயகத்திற்கான ஆதரவு தீவிரமடைந்து வருகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் இருவரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பெயரை குறிப்பிட்டோ அவருடைய கொள்கைகள் தொடர்பாகவோ பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg