Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட கொரியாவின் அணுசக்தி திறன் அமெரிக்காவை தாக்கவல்லது!

In
Published: 06:52 GMT, Oct 20, 2017 |
0 Comments
1550
icon_com
This post was written by : Elakkiya
_95056974_038356031reu

அமெரிக்காவை ஒரு அணுசக்தி ஏவுகணை மூலம் வட கொரியாவால் தாக்க முடியும் என்று அமெரிக்க மத்திய புலனாய்வு முகவரகத்தின் தலைவர் மைக் பாம்போ எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவை தாக்கும் திறன் தம்மிடம் இருப்பதாக வடகொரியா ஏற்கனவே கூறிவருகின்ற நிலையில் மத்திய புலனாய்வு முகவரகத்தின் தலைவர் அதனை உறுதிப்படுத்துவது போன்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இராஜதந்திர மற்றும் பொருளாதார தடைகளுக்கு வொஷிங்டனை வலியுறுத்துகின்ற போதிலும், இராணுவ நடவடிக்கையே அதன் விருப்பமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘ வடகொரியாவின் ஏவுகணை நிபுணத்துவம் விரைவாக முன்னேறிச் செல்கின்றது. அது எப்போது வெற்றிபெறும் என்பதை உறுதிப்படுத்துவது அமெரிக்க உளவுத்துறைக்கு கடினமானது’ என்றும் மைக் பாம்போ எச்சரித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன், வடகொரியாவுடனான மோதலை இராஜதந்திர ரீதியில் மோதலை தீர்ப்பதற்கு விரும்புவதாக கடந்த வார இறுதியில் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg