Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெற்றிக்கிண்ணத்தை இளம் வீரர்களிடம் கொடுப்பதன் நோக்கம் என்ன?

In கிாிக்கட்
Updated: 07:17 GMT, Oct 20, 2017 | Published: 07:17 GMT, Oct 20, 2017 |
0 Comments
1648
This post was written by : Anojkiyan

கிரிக்கெட் உலகில் அனைத்துவிதமான சம்பியன் கிண்ணங்களையும் சுவீகரித்த ஒரே அணித்தலைவர் என்ற பெருமையை தன்னகத்தே கொண்ட இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி, வெற்றியின் பின்னர் வெற்றிக் கிண்ணத்தை இளம் வீரர்களிடம் கொடுப்பது ஏன் என்ற பரம இரகசியத்தை நெடுநாட்கள் கழித்து கசியவிட்டுள்ளார்.

கிரிக்கெட் உலகில் சம்பியன் கிண்ணங்களை வெற்றிக்கொண்டதன் பின்னர், வெற்றிக் கிண்ணத்தை அணித்தலைவர்கள் ஏந்துவதே வழக்கம். ஆனால் டோனி தலைமையில் அணி வெற்றிபெற்ற சந்தர்ப்பங்களில், வெற்றிக்கிண்ணத்தை இளம் வீரர்கள் கையில் கொடுத்துவிட்டு, டோனி ஒரு ஓரமாகப் போய் நின்றுகொள்வார்.

இந்நிலையில் இதற்கான நோக்கம் என்ன என்பதை, தனது அணித்தலைவர் பதவியை துறந்த பின்னர், பகிர்ந்துக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

“அது ஒரு விளையாட்டுத் தந்திரம். வெற்றி பெற்றதற்கு அடையாளமே வெற்றிக் கிண்ணம். அதை யார் வைத்திருந்தால்தான் என்ன? அதேநேரம், ஒரு வெற்றிக் கிண்ணத்தை அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஒரு இளம் வீரரிடம் கையளிப்பதன் மூலம் அவரை உயர்த்திக் காட்டவும் அவரைச் சந்தோஷப்படுத்தவும், அவரைத் தன்னம்பிக்கை கொள்ளவைக்கவும் முடிகிறது.

அதுமட்டுமல்ல. அந்த வெற்றிக்கு அவர் பங்களிப்புச் செய்திருப்பதை நாம் பாராட்டுகிறோம் என்பதையும் அது உணர்த்துகிறது. அத்துடன், தொடர்ந்து பொறுப்புடன் விளையாட வேண்டியதன் அவசியத்தையும் அவருக்கு அந்தக் கிண்ணம் உணர்த்தும். அடுத்தடுத்த போட்டிகளில் அவர் இன்னும் சிறப்பாக விளையாடினால் அது அணிக்கு நல்லதுதானே” என கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg