Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறந்த பிரெக்சிற் உடன்பாடு எட்டப்படும்: மெர்க்கல் நம்பிக்கை

In
Updated: 06:44 GMT, Oct 20, 2017 | Published: 06:44 GMT, Oct 20, 2017 |
0 Comments
1238
This post was written by : Risha

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையே சிறந்த பிரெக்சிற் ஒப்பந்தமொன்று எட்டப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளை முன்னோக்கி நகர்த்துவது தொடர்பில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை வலியுறுத்தியிருந்த நிலையில், அது தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர், ”எனது பார்வையில், பிரெக்சிற் தொடர்பில் உடன்பாடொன்றை எட்ட முடியாது என்பதற்கான எவ்வித அறிகுறிகளும் இல்லை.

நாம் அனைவரும் தெளிவான நிலைப்பாட்டில் இருந்தால், ஒரு நல்ல முடிவை எட்ட முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. அது உரிய கால இடைவெளியில் நடைபெறும்.

எதிர்பாராத தீர்விற்கு மாறாக பிரெக்சிற் உடன்பாடொன்று எட்டப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்காக நாம் அனைவரும் தீவிரமாக உழைத்து வருகிறோம்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg