Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியல் அமைப்பு குறித்து ஏன் இந்த அவசரம்?

In இலங்கை
Updated: 06:33 GMT, Oct 20, 2017 | Published: 06:32 GMT, Oct 20, 2017 |
0 Comments
1116
icon_com
This post was written by : Arul Jesu
ajith

புதிய அரசியல் யாப்பில் எவ்வாறான விடயங்கள் உள்ளடங்க வேண்டும் என்பதனை கூறுவதற்கு பதிலாக அரசியல் யாப்பே வேண்டாம் என தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம் என பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

பண்டாரகம ரம்புக்கன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போது வரையில் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான சட்டமூலம் தயாரிக்கப்படவில்லை எனவும், அவ்வாறு தயாரிக்கப்படாட சட்டமூலம் குறித்து கற்பனை செய்து கருத்துக்களை வெளியிடுவது ஜனநாயக ரீதியாக பொறுத்தமற்றது எனவும் கூறினார்.

மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே எந்வொரு காரணத்திற்காகவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ளும் அரசியல் யாப்பு மாற்றத்தை ஏற்றுக்கொள்ள போவது இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg