Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஜினியின் கபாலியை முந்திய மெர்சல்!

In சினிமா
Published: 06:54 GMT, Oct 20, 2017 |
0 Comments
1461
This post was written by : Vithushagan
imgonline-com-ua-twotoone-TzFnY45SDNaYXl-638x381

விஜயின்   ‘மெர்சல்’ திரைப்படம்  முதல் நாள் வசூல் நிலவரத்தின் அடிப்படையில்    ரஜினியின் ‘கபாலி’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் பல்வேறு இடையூறுகளை கடந்து   தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா உட்பட உலகம் முழுவதும்  வெளியானது.

விஜய்யின்  ஏனைய  படங்களை விட மெர்சல் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் படம் வசூலில் சாதனை படைத்தது. முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 22கோடி ரூபா முதல் 24 கோடி ரூபாவரை   வசூலித்து இருப்பதாக வினியோகஸ்தர்கள்  தெரிவித்துள்ளனர்.

ரஜினியின் கபாலி பட முதல் நாள் வசூல் சாதனையையும், விஜய்யின் ‘தெறி’ பட முதல் நாள் வசூல் சாதனையையும் ‘மெர்சல்’ முறியடித்துள்ளது. முந்தைய படங்கள் அதிக காட்சிகளில் ஓடின. ஆனால் மெர்சல் படம் விசே‌ஷ காட்சி இல்லாமலேயே வசூலை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘மெர்சல்’ படம் ரசிகர்களுக்காக பிரத்யேகமாகவும் திரையிடப்பட்டதன் மூலம் அதிக வசூல் குவிந்தது.   மெர்சல் படத்தின்  வசூல் எதிர்பார்த்ததை விட திருப்திகரமாக இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg