Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களின் உரிமைகளுக்கு தொழிற்கட்சி உத்தரவாதம்

In
Updated: 07:16 GMT, Oct 20, 2017 | Published: 07:16 GMT, Oct 20, 2017 |
0 Comments
1301
This post was written by : Risha

பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தவர்களின் உரிமைகளுக்கு தமது கட்சி உத்தரவாதம் அளிப்பதாக, எதிர்க்கட்சியான தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்சிற் பேச்சாளர் மைக்கல் பார்னியரை நேற்று (வியாழக்கிழமை) பிரஸ்சல்ஸில் சந்தித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மைக்கல் பார்னியருடனான சந்திப்பை தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறுவது தொடர்பில் பிரித்தானியாவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பை தொடர்ந்து, பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள், நிறுவனங்கள், உற்பத்தித்துறை மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டது. ஆனால், அந்த நிச்சயமற்ற தன்மையை போக்க தெரேசா மே அரசாங்கம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களுக்கு இது தொடர்பில் உத்தரவாதமளிப்பது அவசியமானதொன்றாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு சட்டபூர்வமாக செலுத்த வேண்டியதை நாம் செலுத்த வேண்டும். அதற்கு மேலாக செலுத்த வேண்டியதில்லை. ஆனால், நாம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மிகவும் உடன்படுகிறோம் என்பதை உறுதிபடுத்த வேண்டும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg