Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற்றை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் குடியேற்றவாசிகள்!

In
Updated: 08:00 GMT, Oct 20, 2017 | Published: 07:57 GMT, Oct 20, 2017 |
0 Comments
1186
icon_com
This post was written by : Risha
migr

பிரெக்சிற்றின் மூலம் தாம் பிரித்தானியாவில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படக் கூடும் என சட்டவிரோத குடியேற்றவாசிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

எனவே, பிரெக்சிற்றிற்காக ஆவலுடன் காத்திருப்பதாக சட்டவிரோத குடியேற்றவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் குடியேற்றவாசியொருவர் கூறுகையில், ”பிரெக்சிற்றின் பின்னர் ஐரோப்பிய மக்கள் பிரித்தானியாவைவிட்டு வெளியேறும் பட்சத்தில், குறைந்த ஊதியத்தில் பணியாற்றுவதற்கு பிரித்தானிய அரசாங்கத்திற்கு வேலையாட்கள் தேவைப்படக்கூடும். அதன்போது எம்மை அப்பணிகளில் அரசாங்கம் இணைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கிறோம். அதன்மூலம் நாம் சட்டபூர்வமாக நாட்டில் அங்கீகரிக்கப்படுவோம்” என நம்பிக்கை வெளியிட்டார்.

பிரித்தானியாவில் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் சட்டவிரோதமாக குடியேறி வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg