Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தடைசெய்யப்பட்ட களைக்கொல்லி மருந்துடன் ஒருவர் கைது!

In இலங்கை
Published: 08:49 GMT, Oct 20, 2017 |
0 Comments
1206
icon_com
This post was written by : Ravivarman

தடைசெய்யப்பட்ட’கிளைபோசெட்’ என்னும் களைக்கொல்லி மருந்துகளுடன் புத்தளம் பிரதேசத்தில் ஒருவரைக் கைது செய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து நேற்று (வியாழக்கிழமை) இரவு முந்தல் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது கீரியங்கள்ளி பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 4 லீட்டர் கொண்ட 45 கேன் கிளைபோசெட் திரவம், அமோனியா குளோரைட் 8 கிலோ, டையோடின் டயசினோன் 7 பக்கட், ஏழு வெற்று கிளைபோசெட் பக்கற்றுக்களும் இந்நடவடிக்கையின் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபரால் கிளைபோசெட் 4 லீட்டர் கொண்ட ஒரு கேன் சுமார் பத்தாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்திருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_4206 IMG_4205 IMG_4200 IMG_4197 IMG_4187

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg