Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியிலும் மலேரியாவைக் காவும் புதிய வகை நுளம்பு: வைத்திய அதிகாரி!

In இலங்கை
Published: 09:42 GMT, Oct 20, 2017 |
0 Comments
1158
icon_com
This post was written by : Ravivarman
image-0-02-06-456790199d70ebc8f3b09572a2f9df0ef4f8d2fa319fb419e5970815be41a038-V

வடக்கில் ஏற்கனவே மன்னார், வவுனியா, யாழ்ப்பாண மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியாவைக் காவும் புதிய வகை நுளம்புவகை கிளிநொச்சியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு இயக்கத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி ம.ஜெயராசா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி திருநகர் வடக்குப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றினுள் இருந்தே இப் புதிய வகை நுளம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு இயக்கத்தின் பூச்சியல் ஆய்வுப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வு நடவடிக்கையின் போதே இவ் வகை புதிய மலேரியா காவி நுளம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மலேரியா காவி நுளம்பு அனாஅக்பிலி ஸ்டீபென்சி என்ற நுளம்பு என இனங்காணப்பட்டுள்ளது.

இப்புதிய நுளம்புகள் மலேரியா ஒட்டுண்ணிகளைக் காவிச் செல்லக் கூடியது என்றும் பொது மக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள க்குச் சென்று மலேரியா இரத்த பரிசோதனை செய்து கொள்ளுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மலேரியா நோய் இன்றும் காணப்படுகின்ற இந்தியா உள்ளிட்ட தென்னாசிய நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்குச் சென்று வருபவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அவசியம் மலேரியா இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி ம.ஜெயராசா தெரிவித்துள்ளார்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய மலேரியா நோய்க்காவி நுளம்புகள் கண்டுப்பிடிக்கப்பட்ட இடங்களிலும், சுற்றயல் பிரதேசங்களிலும் நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிளிநொச்சிப் பிராந்திய பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளரும், மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளருமான சி.மைதிலி குறிப்பிட்டுள்ளார்.

image-0-02-06-27806676f9911fe4484c2aaaa955f522cb741545c6c6be2011c8c3378ec4254c-V image-0-02-06-6cfc34cd735ce3c95ca7354aa566ede59bf51ef7ff759bbc24c3e53c2fd32f5b-V image-0-02-06-0e60c9561ff847864ecf64fc906a273a94f8487387d0f7791744d83526359ac6-V

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg