Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.நா அறிக்கையாளர் ஹக்கீமை சந்தித்தார்

In இலங்கை
Updated: 10:59 GMT, Oct 20, 2017 | Published: 10:43 GMT, Oct 20, 2017 |
0 Comments
1123
icon_com
This post was written by : Arul Jesu
HAKKIM

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீவ் இன்று முற்பகல் நகரதிட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பில் யுத்தத்தின் போது நிகழ்ந்த அசம்பாவிதங்கள், வடகிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள், இனவாதிகளால் மேற்கொள்ளப்படும் முஸ்லிம் விரோத செயல்பாடுகள் என்பவை தொடர்பில் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பப்லோ டி கிரீவ்விடம் கையளித்துள்ளார்.

மேலும் ஐ.நா. சபையின் நிலைமாறு கால நீதி தொடர்பான அறிக்கையில் இலங்கை முஸ்லிம்களின் கரிசனைகள், வகிபாகம் என்பன தொடர்பில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg