Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘சிக்குன் குனியா’ வந்த போது கமல் எங்கு போனார்? அமைச்சர் கேள்வி

In இந்தியா
Updated: 11:30 GMT, Oct 20, 2017 | Published: 11:30 GMT, Oct 20, 2017 |
0 Comments
1190
This post was written by : Kemasiya

டெங்கு காய்ச்சலுக்கு கொடுக்கும், நிலவேம்பு கசாயம் குறித்து அ.தி.மு.க.விற்கு எதிராக கருத்து வெளியிடும் கமல்ஹாசன், 2006 ஆம் ஆண்டு சிக்குன் குனியா ஏற்பட்ட போது, தி.மு.க. கசாயம் கொடுத்த நேரம் எங்கு போயிருந்தார் என,  அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் வைத்து, நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இத குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கமல்ஹாசனின் நிலவேம்புக்கு எதிரான கருத்துக்கு பின்னால், பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் உள்ளதோ என தோன்றுகின்றது. ஏனெனில் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் சிறந்த மருந்தாகும். அப்படியிருக்கையில், தங்கள் வியாபாரம் தடைப்படுமோ என்ற அச்சத்தில் அவர் இவ்வாறு பேசிகிறாரோ என தோன்றுகிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு சிக்குன் குனியா வந்த போதும், இதே நிலவேம்பு கசாயம் தானே கொடுக்கப்பட்டது. அப்பொழுதும் கமல் சென்னையில் தானே இருந்தார், அப்படியிருக்கையில் இப்பொது அ.தி.மு.க. ஆட்சியில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு உள்நோக்கம் கற்பிப்பது தவறு.

நில வேம்பு குறித்து தவறான கருத்தை மக்களுக்கு பரப்பி, அவர்களை பாதிப்படைய செய்வதை அனைவரும் நிறுத்த வேண்டும் என, ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg