Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதிர்கால பொருளாதார நிலைமை குறித்து பிரதமர் உரை

In இலங்கை
Updated: 11:52 GMT, Oct 20, 2017 | Published: 11:41 GMT, Oct 20, 2017 |
0 Comments
1137
icon_com
This post was written by : Arul Jesu
ranil

கடந்த கால தவறுகளை திருத்தி கொண்டு நாட்டை முன்னேற்ற பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்கால பொருளாதார நிலைமை குறித்து பிரதமர் இன்று விசேட அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்பித்து உரையாற்றினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், புதிய தேசிய வர்த்தகக் கொள்கை தற்பொழுது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதற்கமைய புதிய அபிவிருத்தி வங்கியொன்றும் உருவாக்கப்படும் எனவும் கூறினார்.

இதன் மூலம் நாட்டில் வேலையில்லா பிரச்சினையை குறைப்பதற்கும் வரவு செலவுத்திட்ட துண்டுவிழும் தொகையை குறைப்பதற்கும் நல்லாட்சியால் முடிந்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும் 2018 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 3 இலட்சத்து 4ஆயிரம் கோடி ரூபாவை கடனாக செலுத்த வேண்டியுள்ளதாக சுட்டிகாட்டிய பிரதமர், இதற்காக அரசாங்கம் பல முகாமைத்துவ மூலோபாயங்களை வகுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டளவில் அறிவை அடிப்படையாகக் கொண்ட சமுதாய சந்தையின் மூலம் பொருளாதாரத்தை மேலும் கட்டியெழுப்பமுடியும் என குறிப்பிட்ட பிரதமர், ஏற்றுமதித் துறையை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

அதேபோல் மேல் மாகாணத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்தித் திட்டங்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கு தேவையான யோசனைகள் அடுத்த வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg