Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உத்தரகாண்ட் மக்களை தலை வணங்குகின்றேன் – மோடி நெகிழ்ச்சி

In இந்தியா
Updated: 11:48 GMT, Oct 20, 2017 | Published: 11:48 GMT, Oct 20, 2017 |
0 Comments
1186
This post was written by : Kemasiya

“உத்தரகாண்ட் மாநில மக்கள் மிகவும் ஒழுக்கமாக உள்ளதை பார்க்கின்றேன், இங்கு வாழும் குடும்பங்களில் வீட்டுக்கொருவர் இராணுவத்தில் உள்ளதை அறிவேன், எனவே இங்கு வாழும் மக்களை நான் வணங்குகின்றேன்.” என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கேதார்நாத் ஆலயத்திற்கான யாத்திரையை இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, ஆலய தரிசனத்தை முடித்து கொண்டு அங்கு கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய போது, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு உரையாற்றிய பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,

“கேதார்நாத் ஆலயம், அனைத்து சுற்றுலாத்தளங்களுக்கும் முன்மாதிரியாக விளங்குகின்றது. 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில், இவ் ஆலயம் வெகுவாக பாதிக்கப்பட்டது. தற்பொழுது இதன் மீள்கட்டமைப்பின், உட்கட்டமைப்பு பணிகள் மிக அருமையாகவுள்ளன.

எனினும் இவ் ஆலயத்தின் பாரப்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன் சுற்று சூழலுக்கு எவ்வித பாதிப்பும் எற்ப்படக்கூடாது” என அங்கு உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg