நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு வெளிநாடு செல்ல அனுமதி

எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி வரை வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய நீதிமன்றத்திடம் இருந்த அவரின் கடவுச்சீட்டை 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அனைத்து வழக்கு விசாரணைகளின் போதும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியது கட்டாயம் என தெரிவித்துள்ள நீதிமன்றம் அதனை மீறினால் மீண்டும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் ஒருங்கிணைப்பு செயலாளர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.