Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிக்பொஸ் ஆரவிற்கு மணிரத்தினம் ஆலோசனை!

In சினிமா
Published: 14:49 GMT, Oct 20, 2017 |
0 Comments
1379
This post was written by : Ravivarman
aarav-manirathnam

இயக்குநர் மணிரத்தினத்துடன் நடந்த சந்திப்பில் நல்ல கதைகளைத் தெரிவு செய்து நடிக்குமாறு, அவர் தனக்கு ஆலோசனை கூறியதாக பிக்பொஸ் வெற்றியாளர் ஆரவ் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மணிரத்தினத்தை அண்மையில் அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தமை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

”சைத்தான் படத்திற்கு முன்பு வரை சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். அதே போல், மணிரத்தினத்தின் ஓகே கண்மணி படத்தில், கதாநாயகன் துல்கர் சல்மானின் நண்பர்களில் நானும் ஒருவனாக நடித்துள்ளேன்.

அதை இப்போது நீங்கள் பார்த்தால், கூட உங்களுக்கு தெரியும்.எல்லோரையும் போல, எனக்கும் மணிரத்தினத்தின் இயக்கத்தில், ஒரு முழு நீள படத்தில் ஒரு தடவையாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவருடன் நான் எடுத்த ஒரு போட்டோ இப்போது வரை பொக்கிஷமா வைத்திருக்கிறேன்’ என ஆரவ் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg