Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா, ஏ9 வீதியில் அகற்றப்படும் மரங்கள்!

In இலங்கை
Published: 15:25 GMT, Oct 20, 2017 |
0 Comments
1155
icon_com
This post was written by : Ravivarman
IMG_9116[1]

வவுனியா, ஏ9 வீதியில் விழும் நிலையில் காணப்படும் மரங்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அகற்றப்பட்டு வருகின்றன.

வவுனியா, ஏ9 வீதியில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் நாட்டப்பட்ட வாகை மரங்கள் பல வீதி மருங்கில் காணப்படுகின்றன. இவை போக்குவரத்து செய்யும் பயணிகளின் நிழல் தரிப்பிடங்களாகவும், சில நடமாடும் வியாபாரங்களின் வியாபார இடங்களாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், அதில் உள்ள 16 வாகை மரங்களில் 9 மரங்கள் உயிர்ப்பிழந்து விழும் நிலையில் காணப்பட்டன. இவை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் முறிந்து அல்லது பாறி விழலாம் என மக்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் அவை தற்போது அகற்றப்பட்டு வருகின்றன.

இதேவேளை, குறித்த பகுதியில் மீண்டும் புதிய மரங்களை நடுவதற்கும் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

IMG_9118[1] IMG_9117[1]

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg