Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Updated: 16:04 GMT, Oct 20, 2017 | Published: 16:04 GMT, Oct 20, 2017 |
0 Comments
1327
icon_com
This post was written by : Sivaguru Siva
134065298_14262506404251n

சீன கொம்யூனிஸ்ற் கட்சியின் உயர்மட்ட முகங்கள் சிலர் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கின் அதிகாரத்தை கைப்பற்றச் சதி செய்தமை தற்போது பகிரங்கப் படுத்தப்பட்டுள்ளது.

ஆயினும் அவ்வாறு ஷி ஜின் பிங்குக்கு எதிராக சரிசெய்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிடப் பட்டதாகவும் தெரியவருகிறது.

நேற்று முன்தினம் இந்த மாநாட்டில் உரையாற்றிய ஷி ஜின்பிங், கட்சிக்குள் தான் மேற்கொண்ட மாபெரும் ஊழல்ஒழிப்பு நடவடிக்கைகளில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு தண்டனை வழங்கப்பட்ட விடயத்தையும் குறிப்பிட்டிருந்தார்

அத்துடன் வெளிநாட்டு அரசியலமைப்புகளை சீனா பிரதிபண்ணக்கூடாது என்றும் கோரியிருந்தார்.

சீன கொம்யூனிஸ்ற் கட்சியின் இந்த மாநாடு அடுத்தவாரம் முடிவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

_98398505_mediaitem98398504

கத்தலோனியப் பிராந்தியத்தின் தன்னாட்சி உரிமையை மீளெடுத்து அதனை மத்தியரசின் நேரடி ஆட்சிக்குள் கொண்டு வந்த பின்னர் அங்கு எதிர்வரும் ஜனவரியில் தேர்தலை நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு நகர்வைச்செய்ய ஸ்பெயின் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இன்று உடன்பாடு கொண்டுள்ளன.

கத்தலோனியப் பிராந்தியத்தலைவர்கள் அதன் சுதந்திரப் பிரகடனத்தை வெளியிடத் தயாராவதாக குறிப்பிடப்படும் நிலையில் நாளை சனிக்கிழமை முதல் கத்தலோனியாவின் அதிகாரங்களை நாடாளுமன்றத்தின் கீழ்கொண்டு வருவதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

ஸ்பெயின் அரசியல் அமைப்பின் 155 வது பிரிவைப்பயன்படுத்தி மட்ரிட் கத்தலோனிய நிர்வாகத்தை பொறுப்பேற்கலாம் எனவும் எதிர்பார்கப் படுகிறது.

3861

சுற்றாடல் மாசு காரணமாக உலகில் வருடாந்தம் சராசரியாக 90 லட்சம் பேர் மரணமடைவதாக புதிய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

இதில் இந்தியாவில் மட்டும் 25 இலட்சம் இறப்புகள் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது .

உலக சுகாதார நிறுவனத்தால் குறிப்பிடப்படும்  பாதுகாப்பான மாசுபாட்டின் அளவைவிட பல நாடுகளில் பல மடங்கு அதிகமாகவே மாசுபாட்டு நிலைமை உள்ளது.

இதற்கிடையே இந்தியத் தலைநகர் டெல்லியில் இந்தமுறை தீபாவளியின் போது பட்டாசுகளின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும்> தீபாவளியிரவு வெடிக்க வைப்பட்ட பட்டாசுகளால் காற்றின் தரம் மோசமான நிலைக்கு சென்றதுடன்> சில பகுதிகளை இன்றுவரை நச்சுப்புகை சூழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

_92592480_mediaitem92592479

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியொன்றில் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் இன்று நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து இதுவரை 30 உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு முன்னர் ஷியா முஸ்லிம் மசூதிகளில் ஐ. எஸ் அமைப்பு தாக்குதல்களை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

RANJITKUMAR1jpg

இந்திய வழக்குரைஞர் நாயகம் (சொலிசிட்டர் ஜெனரல்) ரஞ்சித்குமார் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

2014-ல் பாஜக அரசாங்கம் பதவியேற்ற பின்னர் மத்திய அரசின் வழக்குரைஞர் நாயகமாக நியமிக்கப்பட்ட ரஞ்சித்குமாரின் பதவிக்காலம் அண்மையில் முடிவடைந்து. ஆயினும் அவருக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில்> தனது பதவி விலகல் கடிதத்தை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு அனுப்பியுள்ள ரஞ்சித்குமார் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg