Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை வந்துள்ள இந்தோனேசிய போர்க்கப்பல்!

In இலங்கை
Updated: 16:30 GMT, Oct 20, 2017 | Published: 16:30 GMT, Oct 20, 2017 |
0 Comments
1281
This post was written by : Ravivarman

இந்தோனேசியக் கடற்படையின் இலகு ரக போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு நல்லெண்ணப் பயணமாக வந்துள்ளது.

கொழும்புத் துறைமுகத்தை நேற்று (வியாழக்கிழமை) வந்தடைந்த இந்தக் கப்பல், மூன்று நாட்கள் தரித்திருக்கும் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கே.ஆர்.ஐ. பங் ரோமோ என்ற இந்தப் போர்க்கப்பலில், 107 இந்தோனேசியக் கடற்படை மாலுமிகள் பணியாற்றுகின்றனர்.

கொழும்புத் துறைமுகத்தின் தரித்து நிற்கும் போது, இலங்கை கடற்படையினருடன் இணைந்து, இந்தோனேசியக் கடற்படையினர் பல்வேறுபட்ட போர்ப்பயிற்சிகளிலும், நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg