Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியல் சர்ச்சைக்குள் மெர்சல் பா.ஜ.க அழுத்ததால் வெட்டப்படும் காட்சிகள் கமலஹாசனும்- சீமானும் கண்டனம்

In இந்தியா
Updated: 16:54 GMT, Oct 20, 2017 | Published: 16:54 GMT, Oct 20, 2017 |
0 Comments
1523
icon_com
This post was written by : Sivaguru Siva

நடிகர் விஜய் நடிப்பில் அட்லியின் இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் அது வெளியான இரண்டாம் நாளில் அரசியல் சர்ச்சைக்குள் சிக்கியுள்ளது

குறிப்பாக மெர்சலில் வரும்  ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறைகள் குறித்து வசனங்களை நீக்கவேண்டுமென தமிழகத்தின் பா.ஜ. க பிரமுகர்கள் அழுத்தமாக கோருவதால் அது குறித்த வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.

இன்னமும் 2 நாட்களில் அவ்வாறான காட்சிகளை நீக்கவேண்டுமென பாஜக கெடு விதித்திருப்பதால் படத்தில் வரும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தயாரிப்பாளர் முரளி அறிவித்ததாக கூறப்படுகிறது. இது இந்தியாவில்; கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான மறு தணிக்கை நகர்வுகள் கூடாதென கமலஹாசன் போன்ற நடிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று இரவு இதனை பதிவிட்டுள்ளார்.

மெர்சல் திரைப்படத்தை மீண்டும் மறு தணிக்கை செய்யக் கூடாது. விமர்சனங்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். மாற்றுக் கருத்துகளை முன்வைப்போரை அமைதியாக்க முயற்சிக்காதீர்கள் எனவும் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை குறித்து படத்தில் வரும் வசனங்களை நீக்க வேண்டுமென கோரப்படும் கருத்துகள் நகைப்புக்குரியதாகவும் அறிவுக்கு ஒவ்வாத வகையிலும் இருப்பதாக நாம் தமிழர் கட்சியிலிருந்து சீமானும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg