Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா பேரூந்துத் தரிப்பிட பிரச்சினைக்கு தீர்வு என்ன?: கூட்டமைப்புகேள்வி

In இலங்கை
Updated: 17:18 GMT, Oct 20, 2017 | Published: 17:18 GMT, Oct 20, 2017 |
0 Comments
1207
This post was written by : Ravivarman

வவுனியா பேரூந்துத் தரிப்பு நிலையம் பலமில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டும் அதனை மக்கள் பாவனைக்கு கையளிக்க முடியாத நிலைமையே காணப்படுவதாக, தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற போக்குவரத்து திருத்தச்சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதற்குப் பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் நிமால்சிறிபால டீ சில்வா, ‘இலங்கை போக்குவரத்துச்சபை, மற்றும் தனியார் பேரூந்து உரிமையாளர்கள், வவுனியாவில் அமைக்கப்பட்ட புதிய பேரூந்து தரிப்பு நிலையத்திற்கு வர விரும்புவதில்லை.

மேலும் அங்குள்ள வியாபாரிகள் அவர்களை பழைய தரிப்பிடத்திலிருந்து செல்லவிடுவதில்லை. உள்ளகப் பிரச்சினையினையை நீங்களே தீர்த்துக்கொண்டால் நல்லது’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg