Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அக்கராயனில் பிரதேச வைத்தியசாலை திறந்து வைப்பு!

In இலங்கை
Updated: 17:22 GMT, Oct 20, 2017 | Published: 17:22 GMT, Oct 20, 2017 |
0 Comments
1220
This post was written by : Ravivarman

கிளிநொச்சி, அக்கராயனில் பிரதேச வைத்தியசாலை இன்று (வெள்ளிக்கிழமை) வட.மாகாண சுகாதார அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வட.மாகாண சுகாதார அமைச்சர், வட.மாகாணசபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை, அரியரத்தினம் மற்றும் வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வட.மாகாண சுகாதார அமைச்சர் குணசீலன், ”இப்பகுதி மக்களின் நீண்டகாலத் தேவைகள் பல சிரமங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

இப்பகுதிக்கான மக்களுக்குத் தியாக உணர்வுடன் சேவை செய்ய வருமாறு இந்த வைத்தியசாலையின் ஊழியர்களை வரவேற்கின்றேன்.

இவ்வைத்தியசாலையில் நிலவும் மேலும் சில குறைபாடுகளை எதிர்காலத்தில் எனது அமைச்சின் அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று நிவர்த்தி செய்வதற்கு அமைச்சர் என்ற வகையில் முயற்சிப்பேன்” என வட.மாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg