Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்சையில் மெர்சல்- நான்கு காட்சிகளை நீக்க தீர்மானம்

In சினிமா
Updated: 09:20 GMT, Oct 21, 2017 | Published: 09:19 GMT, Oct 21, 2017 |
0 Comments
1645
This post was written by : Elakkiya

பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படத்தின் நான்கு காட்சிகளை நீக்குவதற்கு தயாரிப்பாளர் தரப்பு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான கடிதத்தை தயாரிப்பாளர் தரப்பு எதிர்வரும் 23 அல்லது 24 ஆம் திகதி தணிக்கை குழுவிடம் சமர்பிக்கவுள்ளதாக தெரியவருகின்றது.

விஜய் நடிப்பில் அட்லியின் இயக்கத்தில் கடந்த தீபாவளி தினத்தில் திரைக்கு வந்த மெர்சல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. மருத்துவ துறையில் இடம்பெறும் தவறுகளை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்து ரூபாவுக்கு மருத்துவம் செய்யும் வைத்தியராக விஜய் நடிக்கிறார்.

திரைப்படம் வெளியாகி மூன்றே நாள்களே ஆகியுள்ள நிலையில் படம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. மத்திய அரசாங்கத்தினால் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தொடர்பான வசனங்கள் திரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதால் அரசியல் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதேவேளை மருத்துவர்களை அவதூறு செய்வதாக மருத்துவ தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதற்கிடையில் திரைப்படத்திலுள்ள ஜி.எஸ்.டி. வரி தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும் என பா.ஜ.க. கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்குவதற்கு தயாரிப்பாளர் தயாராகியுள்ளதாக கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg