Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரைன் புயல் வீசும் சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை

In
Updated: 10:15 GMT, Oct 21, 2017 | Published: 09:46 GMT, Oct 21, 2017 |
0 Comments
1515
This post was written by : Suganthini

பிரித்தானியாவில் கடும் மழையுடன் பிரைன் (Brian) புயல் வீசக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக வானிலை அவதானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தப் புயல் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசுமென்பதுடன், இன்று (சனிக்கிழமை) முதல் இதன் தாக்கம் காணப்படும். வேல்ஸ், தெற்கு இங்கிலாந்து உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் புயல் தாக்கம் காணப்படுமெனவும் வானிலை அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் புயல் வீசும் பட்சத்தில் அநேகமான பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படுமென்பதுடன், போக்குவரத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேல்ஸில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  ரயில் மற்றும் படகுப் போக்குவரத்துச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதென்பதுடன், கடலை அண்டி அமைந்துள்ள வீதிகளூடான போக்குவரத்துகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.

மேலும், இந்த வாரம் வேல்ஸின் கரையோரப் பகுதிகளில் அபாயகரமானதான நிலைமை நீடிக்குமென்பதுடன், ஆகையால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் வேல்ஸ் தேசிய வள நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg