Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முகாபேயின் தூதுவர் நியமனத்துக்கு கண்டனம்

In உலகம்
Updated: 12:27 GMT, Oct 21, 2017 | Published: 12:08 GMT, Oct 21, 2017 |
0 Comments
1175
icon_com
This post was written by : Suganthini
robert

உலக சுகாதார ஸ்தாபனத்தின் நல்லெண்ண தூதுவராக ஸிம்பாவேயின் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனத்துக்கு உலக சுகாதாரத் தலைவர்கள் இன்று (சனிக்கிழமை) கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இவரது நியமனம் தொடர்பான முடிவை மாற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் இந்;த நியமனமானது, நியாயமற்ற வகையில் அமைந்துள்ளதென்பதுடன், தவறானதெனவும் உலக சுகாதாரத் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் நல்லெண்ணத் தூதுவராக ரொபர்ட் முகாபே நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமக்கு ஆச்சரியமும் ஏமாற்றமும் அளிக்கின்றதென்பதுடன், உலக சுகாதாரம் தொடர்பான வேலைத்திட்டத்தில் பாரிய ஆபத்து ஏற்படலாமெனவும் பிரித்தானிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.

இதேவேளை, இவரது நியமனத்துக்கு மனித உரிமை ஆர்வலர்களும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

93 வயதான முகாபே ஸிம்பாவேயின்   ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகித்த அவரது 37 வருடகால ஆட்சியில், மனித உரிமை மீறல் சம்பவங்கள் மற்றும் பொருளாதாரப் பாதிப்பு தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இதனை அடுத்தே, இவரது நியமனத்துக்கு உலக சுகாதார தலைவர்கள் மத்தியில் கண்டனம் எழுந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg