Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வித்தியாவின் குடும்பத்தினரை சந்தித்தார் ஜனாதிபதி

In இலங்கை
Updated: 12:33 GMT, Oct 21, 2017 | Published: 12:33 GMT, Oct 21, 2017 |
0 Comments
2145
This post was written by : Risha

படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் குடும்பத்தினரை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (சனிக்கிழமை) சந்தித்தார்.

ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டுவரும் நடமாடும் சேவையை ஆரம்பித்து வைக்கும் வகையில் இன்று வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்த நிலையிலேயே வித்தியாவின் குடும்பத்தினரையும் சந்தித்துள்ளார்.

வவுனியா குருமண்காட்டில் அரசாங்கத்தினால் வித்தியாவின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட வீட்டிற்கு சென்ற ஜனாதிபதி அங்கு வசிக்கும் வித்தியாவின் குடும்பத்தினரை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் ஆகியோரும் ஜனாதிபதியுடன் உடன் சென்றிருந்தார்.

IMG_7864 (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg