Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தலவாக்கலையில் காணாமல் போன இளைஞனின் சடலம் கண்டெடுப்பு

In இலங்கை
Updated: 13:25 GMT, Oct 21, 2017 | Published: 12:42 GMT, Oct 21, 2017 |
0 Comments
1426
icon_com
This post was written by : Risha
IMG-20171021-WA0010

தலவாக்கலை நகரில் காணாமல்போன 18 வயதுடைய இளைஞன் இன்று (சனிக்கிழமை) மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

தலவாக்கலையில் கடையொன்றில் பணியாற்றி வந்த குறித்த இளைஞன் கடந்த 17ஆம் திகதி காணாமல் போயுள்ளார்.

இதனை தொடர்ந்து 18ஆம் திகதி கடை உரிமையாளரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், விசாரணைகளும், தேடுதல் நடவடிக்கைகளும் தொடர்ந்து வந்த நிலையில், இன்று அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துக் கொண்டாரா என்ற கோணங்களில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg